காசியபன் கவிதை

குடும்ப வேலிக்குள்
யாகப் பசு பரிதவிக்கும்
வாழ்க்கை அழிகளுக்குள்
பண்டெலாம் அலறும் சிங்கம்
இன்று தலையைச் சொறிந்து நிற்கும்
சிறகடித்து சிட்டுக் குருவி
வானத்தில் மிதக்க
குயிலின் சுருதியில்
வானம்பாடி ஆகிரி இசைக்கும்
மஞ்சை மூங்கில்கள்
தலை விரித்து ஆட
பச்சிலைகள் உதிர்க்கும்
கண்ணீர்த் துளிகள்

(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)