புஷ்பா விஸ்வநாதன் கவிதை

குதிரையில் வருவான் ராஜகுமாரன்
எனைக் கொத்திக்கொண்டு போகவென
கனவு காணும் பெண்ணே!
விண்மீன்களும் பிறைநிலவும்
கனவில்தான் கண் சிமிட்டும்

நிஜத்திலோ
உனைக் கொண்டுபோக
நீளுகிறது பார் ஒரு பாம்புக்கரம்
உனைக் குத்திக் கிழிக்கும்
கூர் நகங்களோடே.
உன் வாழ்க்கையோ
முட்கள் நிறைந்த பாதைதான்

உறங்கியது போதும்
விழித்தெழு.
துணிந்து நில்
போராடு
வாழ்வை வாழ்ந்து காட்டு.