
ஒரு மலர் மறு மலரை
பார்த்து கேட்டது நீயும்
ஏன் விழுந்தாய் என்று.
உன்னை போலதான்
காய்ப்புக்கு உதவாதென
உதிர்க்க பட்டேன் என்றது
மறு மலர்
கவலை படாதே
மீண்டும்
உரமாகி
மரம் ஏறி
மொட்டாகி
பூவாகி
காயாகி
கனியாகி
விதையாகி
இதை போலொரு மரத்துக்கு
தாயாகி
மகிழ்ந்திடுவோம்
என்றது முதல் மலர்
