நகுலனின் மூன்று சுருதி கவிதைகள்

 
அழகியசிங்கர் 

வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்

உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்

விஷயம் வேறு.

கேட்டது

அம்மா
யாரைப் பற்றியோ
குறிப்பிடுகையில்
“ஜடம்”
உள்ளத்தைத்
துடைத்தெறிந்துவிட்டு
இடத்தை
அடைத்துக்கொண்டு.

நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4-30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தைப் புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.