நண்டு

லாவண்யா சத்யநாதன்

பிறரைக் கண்டு
பொறாமைப்பட்டதில்லை
பிறர் பொருள்
எதுவும் கவர்ந்ததில்லை
பிறருக்குத் தீங்கு
மறந்தும் நினைதத்தில்லை
காளைபோலுழைத்து
குருவிபோல் சேர்த்து
குஞ்சுகளை வளர்த்துப்
பறக்கவைத்தேனேன்றி
அநாமத்துக்காசு
அரைக்காசும் பெற்றதில்லை.
அகலக்கால் வைத்த்தில்லை.
ஆடம்பரமாய் வாழ்ந்த்தில்லை.
அநீதிக்கு அடிபணிந்ததுமில்லை
உயிருடன் நண்டை வறுப்பதுபோல்
என்னையேன் வறுக்கிறாயென்று
இறைவனிடம் கேட்டான்.
நீ கோணலாய் நடக்கிறாய்
அதனால்தானென்றான் இறைவன்.