
07.01.2025
அப்பாவின் நினைவு தினம்…
இன்று அப்பாவின் நினைவுதினம். இதே நாளில் அப்பா இறந்து போனார். அவர் நினைவுகளில் சுழன்று அப்பாவின் அறை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன். நீண்ட வயதுடன் (95 வயது) இருந்தார். அரசாங்க உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் சம்பளம் மிகக்குறைவு. அதன் பின் ஓய்வூதியம் வாங்கும்போது பலமடங்கு அதிகமாக ஓய்வூதியம் தொகையை வாங்கிக் கொண்டிருந்தார். அதில் அவருக்குப் பெருமை.
அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. மது அருந்த மாட்டார். சிகரெட் பிடிக்க மாட்டார். உண்மையில் சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்தால் சிகரெட் பிடிக்காதீர்கள். கெடுதல் என்று அறிவுரை கூறுவார். ஏன் வெற்றிலை பாக்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்.
அவர் கோபம் வந்து நான் பார்க்கவில்லை. இந்தத் தினத்தில் இன்னும் அப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சரியாய் சொல்ல வரலை.
என் எழுத்தாள நண்பர்கள் பலருக்கு அப்பா நண்பர். நகுலன் என் வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது அப்பாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார்.

உங்கள் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த அனுபவம் அடியேனுக்கும் உண்டு.
அவரை நினைத்து வணங்குகிறேன்.
அருமை அப்பாவின் நினைவு மனம் நெகிழசசெய்கிறது