
இப்படி அநியாயம் செய்கிறதே
இதை யார் கேட்பது
அழகழகாய்ப் புடவைகள் பொருத்தமாய்க் கழுத்தணிகள்
பொங்கி வரும் சிரிப்புடன்
புதுப் புனல் போலிருந்தவளை
பட்டென்று பிரித்துப் போனாயே
ஊரெல்லாம் கொள்ளையிட்டு
உலை பொங்கி உண்போர்கள்
எத்தனையோ உல்லாசமாய்
பலகாலம்
வாழ்ந்திருக்க
அன்பு தவிர ஏதுமறியா
ஓருள்ளத்தை
அவசரமாக ஏனழைத்தாய்?
ஓடி ஓடிக்
களைத்த கால்கள்
ஓய்வை நெருங்குகையில்
மொத்தமாகச் சிறகறுத்தாய்
உன்னுடைய தராசில்
நியாயமென்ற ஒன்று இல்லையா
இல்லை
உன்னிடம் தராசே இல்லையா
எல்லார் வீட்டு வாசலிலும்
முக்காடிட்டு நீ
அமர்ந்திருப்பது தெரியாதவளா
நான்
ஆனாலும்
உன் தரத்துக்கேகூட இது
தாழ்ச்சிதான்.
எத்தனைபேரை இன்று
அழவைத்திருக்கிறாய்
நல்ல மனுசி ஒருத்தி
பட்டாம்பூச்சிபோல் சிறகடித்தது
பொறுக்கவில்லையா
காலமே உனக்கு
இதை வேறு எப்படி முடிப்பது என்று
தெரியவில்லை.
வேறெப்படி
மறுபடி
அழுதுதான்
