சென்று வாருங்கள் உமா/அமிர்தம் சூர்யா

எப்போதும் யாருக்கும் நான் கண்ணீர் அஞ்சலி, ஆழ்ந்த வருத்தம், RIP போடுவது இல்லை . மரணம் குறித்து என் நிலைப்பாடு அது.

கவிஞரும் என் தோழியுமான உமா மோகன் சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு பூ உதிர்வதை போல காலத்தில் இன்று கரைந்து போனார். எப்போதும் புன்னகை தவழ , நட்பு பாராட்டி , பிறரை கொண்டாடிய ஆத்மா .

என் மகன் திருமணத்திற்கு வந்து இருக்கிறார் . அவரின் 2 நூல் வெளியீட்டில் நான் பேசியிருக்கிறேன் . ஒரு முறை கடலூரில் அவர் நூல் குறித்து பேசியபோது அந்த அரங்கம் நிரம்பி நடுவில் ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது. நான் அந்த இருக்கையை பார்த்து இந்த கூட்டத்திற்கு அரூபமாய் வந்து அமர்ந்திருக்கும் உமாவின் கணவர் திரு மோகனுக்கு வணக்கம் என்றேன் . சபையிலிருந்தோர் குழப்பத்தோடு அந்த இருக்கையையே அவ்வப்போது பார்த்த படியிருந்தனர்.

இன்று மோகனை அடுத்து உமா காலத்தில் கரைந்து விட்டார். அவரின் கவிதையும் கதையும் இங்கு வந்து போன தன் சாட்சியாய்.

நம் நினைவில் என்றும் வாழ்வார் உமா மோகன். சென்று வாருங்கள் உமா . மீண்டும் சந்திப்போம்