
கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட இலக்கிய ஆளுமை என் இனிய நண்பர் உமா மோகன் நேற்றிரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். நேற்று முன்தினம் அம்பை நேரில் சென்று பார்த்துவிட்டு வரும்படி கூறியிருந்தார். நான் சென்னையில் இருந்தேன், மேலும் அவர் எங்கு இருக்கிறார் எனறு தெரியவில்லை. அழைப்புகளையும் எடுக்கவில்லை. பிறகு வாட்ஸ்அப் வழியாக “வீட்டிற்கு வந்துவிட்டேன் இப்போது பரவாயில்லை என்று கூறியிருந்தார்.” அதற்கிடையில் நேற்றிரவு உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். நானும் வெங்கட சுப்புராய நாயகரும் நேரில் சென்று இன்று பார்க்க இருந்தநிலையில் அதிர்ச்சியான இத்தகவல் எங்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் AIR லிருந்து பணி ஓய்வு கிடைத்ததும் திட்டமிட்டிருக்கும் அனைத்தையும் எழுதி முடிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். அவருடைய விடுதலை போரில் வீரமகளிர் _ வானொலி உரை, நூலாக வந்தது. அது சிலரின் காழ்ப்புணர்வு காரணமாக நிறைய வாசகர்கள் கவனத்திற்கு செல்லாதது குறித்த வருத்ததைப் பகிர்ந்திருக்கிறார். பலவிதத்தில் பெண் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஒடுக்கப்படுவது கொள்கைவாதிகள் நிறைந்த தமிழ் இலக்கிய உலகத்திற்கு புதியதில்லை. உமா மோகன் எதைக் குறித்தும் கவலைப்படாமல் மலர்ந்த முகத்துடன் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டார, இன்று அவருடைய எழுத்தும் குரலும் மட்டுமே மிச்சமிருக்கிறது.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இறுதி சடங்குகள் நாளை காலை 7 மணிக்கு :
முகவரி :
No. 102, R temple road, kurumbapet ( near Siemens company), puducherry – 605009.
