11.01.2025

நேற்று என் நெடுநாளைய நண்பர் ப்ரியம் அழைத்ததால் இரண்டு மூன்று நூல்கள் வெளியீடு கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
மாலை 4 மணிக்குக் கிளம்பி என் ஸ்டாலுக்குத்7 மணிக்குத் திரும்பினேன். முதலில் வேரல் புக்ஸ் வெளியிட்ட இரண்டு நூல்கள் வெளியீடு.
செந்தில் பாலாவின் கோடுகளில் சேகரிப்பவன் என்ற கோட்டோவியங்கள்.
இரண்டாவது குமரன் விஜியின் எலி நிலத்துடன் பேசும் மழை என்ற கவிதை நூல்.
இந்தக் கூட்டத்தில் நான் வாழ்த்துரை வழங்கினேன். செந்தில் பாலாவின் ஓவியங்களைப் பார்க்கும்போது எனக்கு நடேஷ் ஞாபகம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் செந்தில் பாலாவின் ஓவியங்கள் தனித்துவமானவை.
அதேபோல் குமரன் விஜியின் üஎன் நிலத்துடன் பேசும் மழைý என்ற கவிதைப் புத்தகம். இதை இன்னும் புரட்டிப் பார்க்கவில்லை. இத்தொகுப்பில் கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.
46வது கவிதையில்
எனக்கு நின்ற பாதை புரிந்தது
அவனுக்கு வந்த பாதை புரிந்திருக்கும் என்ற வரிகள் மூலம் கவிஞர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் என்று புரிகிறது. எந்தப் பாதை? எங்கே சந்திக்கிறார்கள் என்ற விபரம் தரப்படவில்லை.
இக் கவிதைகளை இன்னும் படிக்க வேண்டும்.
