பி.ஆர்.கிரிஜா/தைத்திங்கள் முதல்நாள்!

மங்களம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!
மனம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!
பொங்கல் பொங்கிடும் தைத்திங்கள் முதல்நாள்!
புத்தாடை உடுத்திடும்
தைத்திங்கள் முதல்நாள்!
இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில்
அன்பு பொங்கிட
ஆர்வம் பொங்கிட
இன்பம் பொங்கிட
ஈகை பொங்கிட
உறவு பொங்கிட
ஊக்கம் பொங்கிட
எழுத்து பொங்கிட
ஏற்றம் பொங்கிட
வாழ்த்துகிறேன்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்