
அதனால் பயனில்லை
என்கிறார்கள் பார்ப்பவர்கள்.
தெரியாமல் பலன் கொடுக்கும்
கற்பகதரு அது.
சுவர்கள் எல்லையாகவும்
ஓடுகள் வானமாகவும்
வாசற்கதவின்றி
வாவென்றழைக்கும்.
ஆடுமாடுகள் ஏன்
கழுதைகளுக்கும்
அது காப்பகம்.
காசுவைத்துச் சூதாடக்
கச்சிதமான இடம்.
முதன்முதல் சிறுவர்கள்
சிகரெட் பற்றவைக்க
அரிச்சுவடி கற்றுத்தரும்
ஆரம்பப் பள்ளி.
கல்லூரி மாணவர்
பிறர் தொல்லையின்றித்
தேர்வுக்குப் படிக்கும்
தேவலோகம் கூட.
கருப்பு நிறக் கமலா
அங்கேதான் அருமையாக
இளைஞர்களுக்கு
இரவு வகுப்பெடுக்கிறாள்.
