விஞ்ஞானி/ அமெரிக்கா பொங்கல்

நெற்றியில் புரளும் முடியை
இழுத்து கட்டு என்றாள்
அம்மா

சென்னையிலிருந்து
டீ வி திரையில் என்னை
பார்த்தபடி இயக்கிக்கொண்டு
இருந்தாள் அவள்

அமெரிக்காவில் நான்
பொங்கல் செய்து கொண்டு
இருந்தேன்

தொழில்நுட்பத்தின்
உதவியுடன்
அம்மா சொல்ல சொல்ல
செய்ததில் சுவையான
பொங்கல் தயாரானது.

குடும்பத்தின் ஆரவார
சந்தோஷத்தை திரையில்
கண்டு ரசித்தாள் அம்மா.

ஆனால் ஒரு விஷயத்தில்
தொழில்நுட்பம் தோற்று
போனது

அந்த சுவையான
அருமையான பொங்கலில்
அம்மாவின் கைமணம்
மட்டும் தெரியவில்லை.