முனைவர் ந.பாஸ்கரன்/ ஓவியன்

போக்குவரத்து
நெரிசல் அதிகம் இல்லாத அகலச்சாலை
அவனுக்கு வசதியாகத் தான் இருந்தது.

தொளத்
தொளச் சட்டைக்
கால்புறம் மடிக்கப்பட்டப் பேண்டுக்குள்
ஓர் அழுக்கு மனிதன்.
முகமெல்லாம் வாழ்க்கை அனுபவத் தழும்புகள்.

கையிலும் சட்டைப் பையிலும்
வண்ண வண்ண சாக்பீஸ்
துண்டுகள்.

அழுக்குத் துணியும் தூக்கி
எறியப்பட்ட வாழை இலையும்
சாலையைச் சுத்தம் செய்தன.

அடுத்த
ஒரு மணிநேர ஓவியத்தவ ஈடுபாட்டில்
மகா ஆஞ்சநேயர் பாதாதிக் கேசமாக
விஸ்வரூபம் எடுத்தார்.

ஓவியப்
பிரம்மாண்டகன்
இவனா?!

உதட்டிலும் உடம்பிலும் பேர
மைதியுடன் கந்தல்துணி
விரிப்புமேல் அமர்ந்திருந்தான்.

வருவோர் போவோர்
ஆஞ்சநேயர் மீது
அள்ளி இறைத்தனர்
சில்லறைக் காசுகளை.

அழகு ஆஞ்சநேயரின்
வயிறும் மார்பும்
அவ்வளவாக நிறையவேயில்லை.