ஞானக்கூத்தன்/கேள்வி

தோண்டினார்கள் நாலடி ஆழம்.
குடிநீர்க் குழாய்களும் சாக்கடைக் குழாய்களும்
அருகில் அருகில் இருந்தன.
கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன.

வெள்ளைக் காரர்களின் ஆட்சிக் காலத்தில்
போட்ட குழாய்கள் என்கிறார்கள்.
நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்
குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்
மண்புழு ஒன்றைக் கூடக் காணோம்.
சென்னைமா நகரத்தை விட்டு
என்றைக்கு நீங்கின மண்ணின் புழுக்கள்.

One Comment on “ஞானக்கூத்தன்/கேள்வி”

Comments are closed.