
கச்சிதமாய்
பொருந்தியிருந்த
நீலவர்ணச் சேலையை
தன் விரல் விலக்கி
வானத்திடம்
காட்டிக் கொண்டிருந்தது
அந்த மேகம்.
தொட்டிச் செடியுறை
நீல மலர்
மற்றொரு மலரிடம் பேசுவதைப் போல்
என்னிடம் தலையசைந்து
பேசிக் கொண்டிருந்தது.
என்னைக் கடந்து
போய்க்
கொண்டிருக்கிறாய்
சலனமேதுமில்லாத
இந்த
நான்கு கால் பிராணியைப்போல்.
உன்னை பகடையாய்
அதன் பிடிக்குள்
இந்தக் காலம் வைத்திருப்பது
புரிந்தாலும்..
உன் லாகிரி தோய்ந்த
அந்த
ஒற்றைச் சொல்லுக்காய்
சுற்றுகிறது
என் உலகம்.
