
மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சி
தோட்டத்தில் நுழைந்தது
சமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போல
வெண்டை பூத்திருந்தது
கத்தரி பூத்திருந்தது
அவரை பூத்திருந்தது
கட்டிவிடப்பட்ட கயிறுடன்
புடலை தொங்கிக் கொண்டிருந்தது
பட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்
பறந்தது, உட்கார்ந்தது
அடுத்த பூவை நாடிற்று
உதவி செய்யவா என்றேன்
சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று.
