வளவ. துரையன் /அனுபவம்

மெல்லிய பனிப்போர்வையாய்
மேலெழுந்து மூடுகிறது
உன் நினைவு.

இத்தனை நாள்
கொட்டிய
நேரக் கொடுக்குகள்
விலகுகின்றன.

தவறிவிழுந்த
அக்குட்டிக்குக்
கொழுகொம்பொன்று
கிடைத்து விட்டது

ஆனால்
எதுவும் நடக்கலாம்.
விழுவோமா வேண்டாமோ

என்று நினைத்து
விழும் இத்தூறல்கள்
நிற்பதற்குள்
அது நடந்து விடும்.

அந்தச் சுனாமி
வருவதற்குள் இப்போது
அமைதி அலை வீசுகிறது.

அதை அனுபவிப்போம்