அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 88

oplus_0

21.01.2025

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  ஒரு வழியாகப் புத்தகக் காட்சி முடிவடைந்து விட்டது போலிருக்கிறது.
அழகியசிங்கர் :  முடிந்து விட்டது. இந்த முறை ரொம்ப மோசம். 
மோகினி : கூட்டம் வரவில்லையா?
அழகியசிங்கர் :  கூட்டம் அதிகமாக வரவில்லை.   
மோகினி :  உங்கள் 27 புத்தங்கள் நன்றாக விற்றதா?
அழகியசிங்கர் :  என் புத்தகங்களில் புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த கதைகள்தான் அதிகமாக விற்றது  ஆனால் இந்த முறை நான் சோர்வடையவில்லை.  ரொம்ப இயல்பா எடுத்துக்கொண்டு விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது அதிகமாகச் சோர்வடைந்து விடுவேன்.   ஆனால் இந்த முறை இல்லை. 
ஜெகன் :இந்தப் புத்தகக் காட்சியில் உங்களுக்குப் பிடித்தது எது.
அழகியசிங்கர் : கழிப்பறை வசதிதான். 
மோகினி :   இந்த முறை உங்களால் நடக்க முடியவில்லை என்று சொன்னார்களே?
அழகியசிங்கர் : ஆமாம்.  கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதனால் முன் மாதிரி மற்ற ஸ்டால்களுக்குப் போகவில்லை.
மோகினி :  சென்னைப் புத்தகக் காட்சி முடிந்தவுடன் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே?
அழகியசிங்கர் : அது ஒரு ஏமாற்றம்.  இந்த முறையும் ஏமாற்றம்தான். 3 நாட்களும் வீணாகிப்போய் விட்டது. 
ஜெகன்:  ஏன்?
அழகியசிங்கர்.  யாரையும் பார்த்து என் புத்தகங்களை மொழி பெயர்க்க ஒப்பந்தம் கையெழுத்து வாங்க முடியவில்லை.  இது எனக்குப் பெரிய ஏமாற்றம்தான்.
மோகினி : மற்ற மொழிக்காரர்களுக்கு உங்கள் எழுத்தைப் பற்றி என்ன தெரியும்.
அழகியசிங்கர் : உண்மைதான். தமிழிலே நான் அந்நியன்தான். இதுவரை 40 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் அந்நியன்தான்.
மோகினி : நாளைக்கு இன்னும் பேசலாம். இராய செல்லப்பா அவர் தாயார் பேரில் நடத்திய சிறுகதைப் போட்டியைப் பற்றிப் பேசலாம்.
அழகியசிங்கர் : பேசலாம்.இரவு மணி 10.20 ஆகிவிட்டது. இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.
                    (இரவு 10.30 மணிக்கு)