அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90

23.01.2025

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  புத்தகக் காட்சியைப் பற்றி எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அழகியசிங்கர் :  இன்னும் சொல்ல வேண்டி உள்ளது. 
மோகினி : எதைப் பற்றி?
அழகியசிங்கர் :  சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சியின் போது  கிருபானந்தன் கூறியபடி குழந்தைகள் அதிகமாகக் கலந்து கொண்டார்கள். அவர்களுடைய உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டார்கள்.  ப்ரியம் ஏற்பாட்டில் இந்திரன் வெளியிட நான் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். இதேபோல் 5 புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். 
மோகினி :  இது மாதிரி எந்த ஆண்டும் நடந்த மாதிரி தெரியவில்லை.
அழகியசிங்கர் :  உண்மைதான். அந்தப் புத்தகங்களைப் பற்றி எதாவது எழுத வேண்டுமென்று ஆரம்பித்தேன்.  இன்னும் தொடர வேண்டும். 
ஜெகன் : வழக்கம்போல் புத்தகங்களை உடனே படித்து விட முடியாது. 

அழகியசிங்கர் : அது உண்மைதான்.
மோகினி : இராய செல்லப்பா நடத்திய கூட்டத்தைப் பற்றி ஒன்றும் கொல்ல வில்லையே.
அழகியசிங்கர் : புத்தகக் காட்சி முடிந்தவுடன் இராய செல்லப்பா கூட்டம். அவருடைய தாயார் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி, 35 கதைகளுக்குப் பரிசு வழங்கியதோடு, சிறுகதை எழுதிய கதாசரியர்கûள்
அழைத்து கௌரவம் செய்து உள்ளார்கள். இதற்குப் பெரிய மனது வேண்டும்.
மோகினி : 10 கதைகளை ஒரு பிரிவாகவும், 25 கதைகளை இன்னொரு பிரிவாகவும் பிரித்துள்ளார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அழகியசிங்கர் : 10 கதைகளை அவர் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்தாலும் 25 கதைகள்தான் சிறப்பு வாய்ந்தவை.
ஜெகன்: மொத்தமாக 35 கதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
அழகியசிங்கர். பிரிவு சரியில்லை என்று தோன்றினாலும், இந்த மாதிரி முயற்சியை யாரும் செய்ததில்லை. இராய செல்லப்பாவிற்கு என் வாழ்த்துகள்.
மோகினி : உங்கள் கதையும் இடம் பெற்றுள்ளதே?
அழகியசிங்கர் : குள்ளம் என்ற பெயரில் நான் எழுதிய கதையும் இடம் பெற்றுள்ளது. பரிசு பெற்றதால் இன்னும் அதிகக் கதைகள் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. திரும்பவும் சொல்கிறேன். இராய செல்லப்பாவிற்குத்தான் இந்தப் பெருமை சேரும்.
மோகினி : தொடர்ந்து இன்னும் பேசலாம்.
அழகியசிங்கர் : பேசலாம்.இரவு மணி 9.36 ஆகிவிட்டது. இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.
(இரவு 10.37 மணி)

One Comment on “அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90”

  1. எமது சிறுகதைப் போட்டியை பற்றிய செய்தி விளக்கம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். நிறைய பரிசுகள் பெற வேண்டும்!

Comments are closed.