அழகியசிங்கர்/வினோத செய்தி – 7

திருக்குறளை மொழிபெயர்த்த தர்லோச்சன் சிங் காலமானார்

சென்னை, பிப். 1- 2025

திருக்குறளை ‘பஞ்சாபி’ மொழியில் மொழி பெயர்த்தவர் தர்லோச்சன் சிங் பேடி, 97. சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் வசித்த இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் அரசு கல்வியியல் கல்லுாரி முதல்வ ராக பணியாற்றிய தர்லோச் சன் சிங் பேடி, திருக்குறள் மீது பற்று உடையவராக விளங்கினார்.
அவர் ‘மனிதர்கள் மீதான அன்பை மையப்படுத்தியதாகவே திருக்குறள் திகழ்கிறது’ என, பரப்புரை செய்தார்.
திருக்குறளை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். அவரது இப் பணி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இவரது மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மிக சிறந்த அறிஞராக விளங்கிய தர்லோச்சன் மறைவு, தமிழகத்திற்கும், பஞ்சாப் மாநிலத்திற்கும் பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என, தெரிவித்துள்ளார். தர்லோச்சன் சிங் பேடியின் மகன் ககன்தீப் சிங் பேடி, தற்போது தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

(தினமலர் நாளிதழ் – 01.02.2025)

One Comment on “அழகியசிங்கர்/வினோத செய்தி – 7”

Comments are closed.