
பெற்றவர் யார், உடன் பிறந்தவர்
யார்?
ஊர் எது, பேர் ஏது, இங்கு ஏன்
வந்தாய்?.
நாள்தோறும் உன் அழுகை
மனக்குகை
புகுந்து மாய்க்கிறதே , இருவிழி
பளபளக்கிறது.
கண்காணா இடம்தேடி
நின்றாயோ,
தெய்வம் கருணை காட்ட
மறுத்ததோ?
பசி மறந்தாய், தூக்கமும்தான்
விட்டிட்டாய்
அதிரும் குரலும் அடங்கிப்
போனாய்.
தேனீபோல் சுழன்றாடும்
ஆற்றல்
போனதெங்கே ?. ஓரிடத்தில்
ஒடுங்கினாய்.
இரும்புச் சங்கிலியில் உனைப்
பிணைத்து
ஈக்கள் மொய்க்கும் தட்டில்
உணவிட்டாரோ..
உண்ணாமல் ,மண்குவளை
நீரும்
அருந்தாமல் எதிர்ப்பைச்
சொல்கிறாய்.
தாளிட்ட கதவைத் தாக்கும்
தெருவிலாடும்
கருப்பு
வெள்ளை,காவி மஞ்சளென
உன்இனம்.
காவலுக்கு உனைவாங்கிக்
கட்டி
வைப்பாரிடம் சிறை
புகுந்தாயே !!!.
