
தினமும் நடை பயிலும் அதே இடம்
அதே முகங்கள்
ஸ்நேகமாய் புன்னகை
மௌனமே மொழி
சில நேரங்களில்
நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று
வேறு சில
புது முகங்கள்
பழைய முகங்கள் எங்கே? மனம்
அலை பாய்ந்தது
இருவர் மறைந்த செய்தி இடியென இறங்கியது .
நொறுங்கிப் போனது இதயம்
புது முகங்களின்
கையசைப்பு
மலர்ந்த புன்னகை
அன்பான உரையாடல்
மனித நேயம்
உயிர்ப்புடன்
இன்றும், என்றும்
என்றென்றும் !
