மீனாட்சி சுந்தரமூர்த்தி/சாலைகள்

நீண்டும்,நெளிந்தும்
,வளைந்தும்,
நிமிர்ந்தும்
செல்லும் சாலைகள்.

ஒன்றிலிருந்து ஒன்று
தொடங்கும்.
புதிதாய்ப்
பளபளக்கும் சில.

முதியவளின் உடலின்
சுருக்கம்
போல் வீறலாய்ச் சில.

தறியில் நெய்திட்ட
சேலையெனக்
கரை
கட்டியவை சில.

மரங்கள் அணிவகுப்பில்
பீடுநடை
போட
வட்டமடிக்கும் சில.

வாங்கிய கடனுக்கு வட்டி
கட்டாது
உடைந்த
மனமெனச் சில.

சாலைகளுக்கு முடிவில்லை,
மானுடத்தின்
தேடலுக்கும.
இல்லையே முடிவு.

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி/சாலைகள்”

Comments are closed.