பயணம் /அழகியசிங்கர்

            


    ஒவ்வொரு முறையும்
    பயணம் செய்யும்போதும்
    ஒவ்வொரு அனுபவம்
    பிரயாணம் கிளம்பும்போது
    மனம் காரணமில்லாமல் 
    படபடக்கும்

    இதுவரை 
    கடினப் பயணங்கள்
    திருப்பதிப் பயணங்கள்தான்

    மறக்கமுடியாத 
    பயணம்
    அமெரிக்கப் பயணம்
    நாடு கடந்த பயணம்
    திரும்பி வரும்வரை
    ஏனோ பயம்

    ஒருமறை அசாம்
    தனியாகப் பயணம்
    கவிதை வாசித்துவிட்டு
    வந்தேன்
    விமானம் திரும்பி வரும்போது
    தடதடவென்று குலுங்கியது
    நிம்மதி போயிற்று

    எங்கள் ஊர் 
    மாயவரம்
    போவது 
    இனிமையான பயணம்

    இந்தியா முழுவதும்
    பல கோயில்களுக்குக்
    குடும்பத்துடன் போய் வந்தாயிற்று

    இனிமேல்
    உள்முகப் பயணம்தான்
    மேற்கொள்ள வேண்டும்...