
அனுதினம் விடியலில்
புள்ளினங்கள் இசை
மயக்கும் சரசாங்கி
சன்னலோர அணிலின் பக்க வாத்திய இசை
பனி படர்ந்த புல்லில்
நுணல் பாடும் பண்
தெருவோர ஆலய
நாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்
சுவற்றில் பல்லியின்
பாவனி ராகம்
தென்னை மர உச்சியில் பாளையின் அசைவு
செவிக்கினிய
சண்முகப்பிரியா
என் அன்னையின் இனிய ஆபேரி
இதை விட சுவர்க்கம்
வேறுண்டோ இப்புவியில் !
