
இ. இ. கம்மிங்ஸ்
தமிழில் : க.மோகனரங்கன்
என் கவிதைகளை
உனக்குப் பிடித்திருந்தால்
மாலைப் பொழுதில்
உனக்கு சற்றுப் பின்னால்
நடந்து வர,
அவற்றை அனுமதி!
அப்போது மக்கள் சொல்வார்கள், “இந்த சாலையில்
இளவரசி ஒருத்தி
தனது அன்பனை சந்திக்க
(இரவை நோக்கி)
உயரமான
விவரமில்லாத
வேலைக்காரர்களுடன்
இவ் வழியே
கடந்து செல்வதைக் கண்டோம்.”
