ஆர் கே இராமநாதன/இருப்பு நிலை.!

பெண்ணொரு மலரா?
இருக்கலாம்.
பெண்ணொரு நிலவா?
இருக்கலாம்.
பெண்ணொரு தென்றலா?
இருக்கலாம்.
பெண்ணொரு புயலா?
இருக்கலாம்.
பெண்ணொரு தேவதையா?
இருக்கலாம்.
பெண்ணொரு யட்சிணியா?
இருக்கலாம்.
பெண்ணொரு போராளியா?
இருக்கலாம்.
பெண்ணொரு சமாதானப்புறாவா?
இருக்கலாம்.
பெண்ணொரு இணைப்புப் பந்தமா?
இருக்கலாம்.
பெண்ணொரு வெட்டுக்கத்தியா?
இருக்கலாம்.
பெண்ணொரு எழிலுருவா?
இருக்கலாம்.
பெண்ணொரு நம்பிக்கைத் விருட்சமா?
இருக்கலாம்.
பெண்ணொரு கடலாழ் மனப்பிரதிநிதியா?
இருக்கலாம்.
பெண்ணொரு வெளியா?
இருக்கலாம்.
பெண்ணொரு உள்ளொளியா?
இருக்கலாம்.
பெண்ணொரு எழுச்சியா?
இருக்கலாம்.
பெண்ணொரு ஏவலாளியா?
இருக்கலாம்.
பெண்ணொரு எஜமானியா?
இருக்கலாம்.
பெண்ணொரு தன்வழித் தாரகையா?
இருக்கலாம்.
யாரையும் சாயலுமில்லாது
யார் கருணையும் விழையாது
சுயம்புவாய் மலரும்
பெண்ணொரு பெரும் சக்தியா?
பெண் தன்னைத்
தானறிந்தே
தீர்மானங்கொள்பவளா?
இம்மகளிர் தின நன்னாளில்
மட்டுமல்ல
ஒவ்வொரு நாளிலுமே
பெண்ணொரு புதுமைச் சக்தியா?
ஆம்!

One Comment on “ஆர் கே இராமநாதன/இருப்பு நிலை.!”

Comments are closed.