மதுவந்தி. /வேண்டுவன

இன்னுமொரு உலக மகளிர் தினம்!
பாதிக்கு மீதியின் வந்தனம்” என
கவிதை சொல்லி மலர்களும் கொடுப்பாய்.
மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.’
இ. வ . இ. பி
(இரு வருமானம் இரு பிள்ளைகள்)
குடும்பத்தில் இயங்குகிற எனக்கு
இன்னும் கொஞ்சம் ஆசைகள்..

“ எத்தனை தரம் சொன்னாலும்
மூணு கட்டு புதினா ஏன் வாங்கணும்?”என
நான் கோபமாய்க் கேட்டால்,
“சரி விடு, நானே ஆய்ந்து தருகிறேன்”
எனச் சொல்வாயா?

சனிக்கிழமை முழுவதும்
பள்ளி ஆண்டுவிழா
நண்பர் இல்ல மணவிழாவென
நாள் போனது தெரியாமல்
வீடு வந்து படுக்கையில்
விழும்போது,”ஞாயிறு மதியம்
வெளியில் சாப்பிடப் போகலாம்” என
நான் கேளாமலேயே சொல்வாயா?

என்னைச் சந்திக்க வந்த
தோழியரோடு நான் பேசியிருக்க,
உன் அறை உன் மடிக்கணிணி விட்டு
“துரிதக் காபி தயாரித்து
வரட்டுமா?”எனக் கேட்பாயா?

இந்தக் கவிதையையும் ரசித்து
உன் தோழர்கள் குழுவில்
பகிர்வாயா?

2 Comments on “மதுவந்தி. /வேண்டுவன”

Comments are closed.