
கண்ணில் பட்டது
அழகான பெட்டி ஒன்று
உள்ளே
ஒன்றுமில்லை வெறும் பெட்டி
எடுத்து வைத்துக்கொண்டேன்
முன்னும் பின்னும்
பார்த்தேன்
எனக்குப் பிடித்திருந்தது
ஆமாம்
உள்ளே இருக்கிற பொருள்
முக்கியமில்லையா
என்று நீங்கள் கேட்கலாம்
அது முக்கியமில்லை
இப்போது
அழகான வெறும் பெட்டிதான்
முக்கியம்
அதைத் தூக்கிப்போட
மனசில்லை
