
அம்மா…என்ன யோசனை கஞ்சி ஆறிடப்போறது குடிங்கோ….சாய்வு நாற்காலியில் தளர்வாய் அமர்ந்து இருந்த நூறு வயது கடந்த மூதாட்டி பத்மினிக்கு அருகில் அமர்ந்து பக்குவமாய் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து உதவினார் மகன் ராஜா ராமன்.
நா எவ்வளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கற… உன் பொண்டாட்டி சியாமா போய்…. ஒத்த ஆளா நின்னு பேத்தி ஸ்வேதாவையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தே கிட்டத்தட்ட வருஷம் இருபத்தஞ்சு ஓடிடுச்சு….
எனக்கு அந்தப் பகவான் ஆயுசு நெறைய எழுதிட்டான் போல… பிடிவாதம் பண்ணாம என்னை ஹோமில சேர்த்திடுடா….
அம்மா… இந்தப் பேச்சை இத்தோட நிறுத்திக்கங்க…நீங்க என் தாய்க்கும் மேல … என்று தழுதழுத்த ராஜாராமனைத் தேற்ற முடியாமல் தவித்தாள் அந்த வளர்ப்புத் தாய்.
