கலாவதி பாஸ்கரன்/பொங்கல் விடுமுறை

படித்து பட்டம் பெற்ற
கிராமத்து இளைஞன்,
வேலையின் பொருட்டு
நகரவாசியானவன்.
உடன் பணி செய்யும்
பட்டணத்துப் பெண்ணை
ஆசை ஆசையாக
காதலித்து மணந்தவன் !

நன்றாகத்தான் ஆரம்பித்தது
மண வாழ்க்கை !
இருவரும் பணி செய்ததால்,
வீட்டு வேலையில் பாதி
இவன் தலையில் !
சனி ஞாயிறு வந்தால்
துணிகள் துவைத்து,
வீட்டை சுத்தம் செய்து
மாலை டின்னர் வெளியில்,
நைட் ஷோ கட்டாயம்!

மிக ஆவலுடன் பொங்கல்
விடுமுறையை எதிர் பார்த்து
காத்திருக்கிறான் !
அனுமதியும் பெற்றுவிட்டான்
அன்பு மனைவியிடம்!
அம்மா வீட்டிற்கு சென்று
அவள் கையால் நன்கு உண்டு ஓய்வெடுப்பதற்கு !