மழை/துரை தனபால்

மழையைக் கண்டு மலைத்துப் போனான்

பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன்

கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து

விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை

விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!