மதுவந்தி/மழை

கவிதை எழுத வேண்டும்
எது பற்றி வேண்டுமானாலும்
என்றவுடன்
மழை என ஒரு சொல்
போதுமெனத் தோன்றியது.

மழை என்றதும்
உனக்குள் தோன்றும்
எல்லாவற்றையும்
நான் சொல்லி
ஏன் நிறுத்த வேண்டும்?

மழையெனும்
ஒரு சொல் போதுமே!!!.

( விருட்சம் கவிதைப் பட்டறை நிகழ்வில் (21.03.2025)
, கவிதைத் தலைப்பு கொடுத்து வாசித்த கவிதை.).