அழகியசிங்கர்/வெண்டைக்காய்

இவ்வளவு
நீள
வெண்டைக்காயை
பட் வீட்டில்தான் பார்த்தேன்

குழம்பு வைக்க
அர்ச்சனா தயாராகி விட்டாள்

நான் சாப்பிடத் தயாராக உள்ளேன்

இந்தக் காய் மட்டும்
திமிர் பிடித்துத்
தனியாய்த் தெரிந்தது
எடுத்து வைத்துக்கொண்டேன்