
அகிலாவுக்கு நல்ல மூடு என்றால் அழகு அழகான புள்ளிக் கோலங்கள், அதன் மேல் வித விதமான அலங்காரம், வண்ணப் பொடிகள் ,வண்ண வண்ண மலர்கள் வைத்து ஒரு கலக்கு கலக்கிடுவாள்.
எதிர்வீட்டு பால்கனியில் நின்று கொண்டு அகிலாவின் கை வண்ணத்தை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரகு மனதுக்குள் மெச்சி கொண்டான்.
“அவளையே கேட்டு விடலாம்”மனதிற்குள் சொல்லிக் கொண்டே படி இறங்கி அவளை நோக்கி வந்தான்.
