மதுவந்தி/விஷ்வாவசு புத்தாண்டு வாழ்த்துகள்!!!

இடைக்காடர் வருடாதி வெண்பா
பாடின பின்பு வேறென்ன
சொல்லிவிட முடியும்,
தமிழ்ப் புத்தாண்டு பற்றி ?

முதல்காடர் எவரேனும்
பாடிய பின்னே
எண்ணூறு வருடங்களுக்கு முன்
இடைக்காடருந்தானே பாடினார்!!!.

இப்போ,
அறிதிறன் பேசியும்
அலெக்சாவும்
அடுக்கக வீடுகளும்
ஆகாயமே பாராத நாட்களுமாய்
புத்தாண்டு பிறந்ததையும்
சமூக வலைத்தளங்களிலேயே
கொண்டாடுகிற பாட்டை
நான் பாடாமல்
வேறெந்தக் காடர் பாடுவார்?

ஓட்டத்தின் நடுவே
கொஞ்சம் நின்று,
மேலே வானத்தையும்,
கீழே புல் நடுவே நெருஞ்சிப் பூவினையும்,
பார்த்து ரசிக்கிற மனசும் நேரமும்
வாய்க்கிற புத்தாண்டாக
விஷ்வாவசு ஆண்டு பிறக்கட்டும் !!!
. 13.04.25.