தொகுப்பு : நா வானமாமலை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம் : சேலம் மாவட்டம்
1. பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஓட்டி
வலது புறம் மூரி வச்சி
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்.
முசிறி உழவிலே
மொளச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு
குறிப்பு : பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையார்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.
கவிஞர் s.s சடையப்பன் : சேலம், அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர், நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற் கருவியை இவர் உபவாத்தியமாகப் பயன் படுத்து கிறார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை. தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன.

One Comment on “நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்”
Comments are closed.