
என்
வீட்டு வாசலின்
முன்
எப்போதும் படுத்திருக்கும்
ஒரு பொன்னிறப் பூனை…
இன்று
என்னவோ,
பட்டுத் துணியைப் போல்
அவ்வளவு குழைவு
அதனை மடியில் வைத்து
அதன் முதுகுப்புறத்தை
என் கைகளால்
நீவி விட ஆசை…
ஆனால் அது,
தன் உடலுக்கு விடுதலை தந்த ஞானியெனப் படுத்திருந்தது…
தூக்கி கொஞ்சுவதை விட
பார்த்துக் கொண்டே இரு –
அதுவே மிகச் சிறந்த போதையென
முன்மொழிந்து கொண்டிருந்தது
அதன் உடல்.

பொன்னிற பூனை போலவே கவிஞரின் கவிதையும் உயர்வாகவும் மென்மையாகவும் இருக்கிறது.
“உடலுக்கு விடுதலை தந்த ஞானி போல்”
மற்றும்
” கைகொண்டு கொஞ்சுவதை விட
கண்கொண்டு ரசிப்பது மேல் ”
போன்ற வரிகள் என் நெஞ்சை தொட்ட வரிகள்.
உங்கள் கவிதை (மலர்கள் )மனம் மேலும்
விரிந்து மணம் பரப்பட்டும்.
வாழ்த்துக்கள்.
தர்மராஜன் குமார்
அருமை