வி.வி கலைச்செல்வி/அதெல்லாம் ஒன்றுமில்லை


வெள்ளை அடிக்கையில்
இடறிவிழுந்து கொஞ்சம் அடிபட்டுவிட்டது
அடிபடுவது மிகச் சாதாரணம்
அதை விடவும் வலி பொறுத்தல் மிக மிகச் சாதாரணம்

அடிபட்ட இடத்திற்கு அம்மம்மா அரதப் பழைய. வைத்தியமாய் எண்ணெய் பூசு என்கிறாள்
அம்மாவோ டைக்ளோ பினாக் ஆயின்மெண்டோடு நிற்கிறாள்
அப்பா வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் சரியாகுமென்கிறார்

நானாக நினைத்துக் கொள்வது ஒன்றுதான்
இவர்களெல்லாம்
ஒரு வலியை மறக்க வைக்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்பதுதான்


தாராபுரம்

One Comment on “வி.வி கலைச்செல்வி/அதெல்லாம் ஒன்றுமில்லை”

  1. அதெல்லாம் ஒன்றுமில்லை.

    தாராபுரம், வி வி கலைச்செல்வி அவர்களுக்கு,

    அருமை,

    வலி தாங்குவத்தில் பெண்கள் இயற்கையிலே சிறந்தவர்கள்.

    இயற்கை அவர்களை அப்படி படைத்து இருக்கிறது.

    அதே நேரம் உறவுகள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்?

    தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். ரத்த பந்தம் அல்லவா?

    அந்தந்த காலத்துக்கு ஏற்ப அவரவர்கள் தரும் பரிந்துரைகள்.

    இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது,
    அவர்களின் அன்பு தான்.

    அவர்கள் சொன்ன வைத்தியம் பலன் அளிக்கிறதோ இல்லையோ, அவர்களின் பரிவு, அன்பு, நிச்சயம் குணம் அளிக்கும்.

    அவர்கள் பாடுபடவில்லை, நம் பாரம்பரியம் காப்பவர்கள் .

    இப்படிக்கு
    வாசகன்
    தர்மராஜன் குமார்.

Comments are closed.