
விசுவாசமிக்க பணியாள்
பசி நேரத்தில்
ஆண்டையின் கண்படாதபடி
மரத்தடிக்கு ஓடோடிப் போய்
வேகவேகமாக உணவை முடித்துக் கொண்டு
வேக வேகமாக வயலுக்கு மீண்டு
விட்ட இடத்திலிருந்து வேலையைத்
தொடர்வது போலவே
அத்தனை நேர்த்தியாகப்
பெய்து கொண்டே இருக்கிறது மழை
அடுத்தடுத்த செய்திகளை
மூழ்கடித்து
மேலே மேலே
புதிய செய்திகளைப்
பெய்து கொண்டிருக்கிறது மழை
வளர்ச்சிக்கான
திட்டமிடுவோரது
மாயக் கனவுகள் மட்டும் திறந்திருக்க
சிந்தனையும் தொலைநோக்கும் விழிப்புணர்வும்
எப்போதோ
அடைப்பட்டுப் போன இடத்தை நோக்கிக்
கரைபுரண்டு ஓடிப்போய்ச்
சென்றடைந்து
முட்டி முட்டிப்
போக்கிடம் அற்றுக்
கடந்து வந்த வழியே
வழிந்தோடித் திரும்பும்
புகார்களும் கேள்விகளும்
கோபங்களும் சாபங்களும்
முணுமுணுப்புகளும் முனகல்களும்
கேவல்களும் விசும்பல்களும்
பரிதவிப்புகளும் ஆற்றாமையும்
கண்ணீரும் பெருகிப் பெருகி
நிற்கிறது
மாநகரமெங்கும்
வெள்ளமாக.
வாங்கிய அடியில்
வீங்கிய விரல்களில்
எழுத மாட்டாது போன விடைகளுக்காகப்
பிரம்பிலிருந்து
மீண்டும் மீண்டும் விழும்
அடிகளைப் போலவே
வாங்கும் இடமின்றித்
தேங்கிய நீர் மீதே
ஓங்கிப் பெய்து
அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது
அடுத்த மழை.!

அருமையான கவிதை.
வித்தியாசமான சிந்தனை.
மழை போல் பொழிகின்ற நடை.
வாழ்த்துகள் கவிஞருக்கு.
அருமை வேனு,
வாழ்த்துகள்,
கவிதைகள் தொடரட்டும் – சோமசுந்தரம் ( இரவி)
வாங்கும் இடமின்றி ஓங்கிப் பெய்யும் மழையே!
வைக்க இடமின்றி தவிக்கும் ஆள்வோர்க்கு
உன் ஒவ்வொரு துளியும் இரட்டிப்பு மகிழ்வே!
நாட்டின் நீர்நிலை உயர்ந்து விட்டதென்றா?
இல்லை ! இல்லை! நிவாரண நிதியும் உயருமென்பதால்.
விசுவாசமிக்க பணியாளோடு செய்யும் ஒப்பீடு ஆஹா..
வீங்கிய விரல்களில் மீண்டும் மீண்டும் விழும் அடி போல, மனிதனை துவம்சம் செய்யும் மழை..
கெடுப்பதூஉம்… எடுப்பதூஉம்.. எல்லாம் மழைதானே வேணு?
நன்றாக நனைந்தேன் மழைக் கவிதையில்
Nice,com
விசுவாசமிக்க பணியாளோடு செய்யும் ஒப்பீடு ஆஹா..
வீங்கிய விரல்களில் மீண்டும் மீண்டும் விழும் அடி போல, மனிதனை துவம்சம் செய்யும் மழை..
கெடுப்பதூஉம்… எடுப்பதூஉம்.. எல்லாம் மழைதானே வேணு?
நன்றாக நனைந்தேன் மழைக் கவிதையில்
குறைந்த தாழ்வு அழுத்த மண்டலம் அசராது நின்று நிதானமாக பெய்து கொண்டே இருக்கும். அதில் மனிதர்கள் படும் துன்பங்கள் புயல் வீசியெறியும் நாசங்களை விட உண்மையில் அதிகம். பரவலாகவும் இருக்கும் பாதிப்பு. உங்கள் அழகிய தமிழ் அத்தகைய சமூக அவலங்களை கொட்டியிருக்கிறது.
அடுத்தும் மழை வருகிறதாமே
ஹய்யா ஜாலி
அப்போ இன்னொரு கவிதையும் வருமே