அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை

வானங் கிழிஞ்சதோ
மாரி பொழிஞ்சதோ
ஊரெல்லாம் கடலாச்சு
உறவுக கதை என்னாச்சு…

ஆடு, மாடுக ஆத்தோட போயாச்சு
ரோட்டுக்கு மேல படகுவிடும் காலமாச்சு
முத்தின கதிரெல்லாம்
முங்கித்தான் போயாச்சு
அறுவடை ஆன நெல்லு
முளைச்சு வீணாச்சு

போட்ட மேம்பாலம்
பொத்துனு விழுந்துடுச்சு
கட்டித் தந்த வீடு
கரைஞ்சுதான் போயாச்சு

கொரானா கொறஞ்சதுனு
மூச்சு விட்ட மனுசப்பய
முழி பிதுங்கி நிக்குறான்
மூத்தவுக செய்த வினை
இளையவுக தலையிலனு
பாரங்களச் சொமக்கிறான்!

2 Comments on “அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை”

  1. அருமை.
    எளிமையான நடை.
    அனைவராலும் ரசிக்கக் கூடிய எழுத்து.
    வாழ்த்துகள்.

Comments are closed.