ம.சக்திவேலாயுதம் கவிதை

சுண்ணாம்பு கட்டங்கள்
தீட்டிய பின்னே
விளையாட ஆளலில்லை..

வீட்டுக்குள்ளே
தடவிக்கொடுத்தபடி அலைபேசிதனிலே
விளையாடும் சிறார்கள்…

தனிமைச்சிறையாலே
தவித்த கட்டத்திற்கு…
அந்த சூழலிலே
யாரோ எறிந்த கல்
தெருநாயின் மீது பட்டிடவே‌….

நொண்டி நொண்டி
வந்த நாய்
‘ரைட்டா ரைட்டா’என்ற கேட்காமல்
கட்டத்தைக்கடந்திடவே…

தன் மீது
விளையாட்டு நடந்ததாலே
சிரித்தபடி கட்டம் பளிச்சிட்டது!

One Comment on “ம.சக்திவேலாயுதம் கவிதை”

  1. நாய் நொண்டும் காட்சிையைக் காண நேர்ந்ததால் பிறந்த கவிதையோ!
    எதிலிருந்தும் கவிதை பிறக்கலாம் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.

    ரசித்தேன் நான்.
    வாழ்த்துகள்!

Comments are closed.