
மனைவியிடம்
கேட்டேன்
ஒமைக்ரான் தெரியுமா? என்று
என்ன இழவுக்குத்
தெரியணும் என்றாள்
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிற
புதிய
கரோனா தொற்று
ஆமாம்.
அது நம்ம
தெருவைத் தேடிக்
கண்டுபிடிப்பதற்குள்
போதும் போதுமென்று
ஆகிவிடும்.
ஓட்டமாய் ஓடிவிடும்
என்று சொல்லிச் சிரித்தேன்
