
நிற்காமல் பெய்கிறது மழை..
நனைந்தபடி நிற்கும் காகம்
வைத்த தீபாவளி முறுக்கை…
திரும்பிபார்க்க மனமின்றி
அமர்ந்திருக்கிறது…
முனங்கியபடியே நனைந்தோடும்
நாய்க்கு அடைக்கலமாக இடம்
கிடைக்கவில்லை…
ஒழுகும் வீட்டில் பாத்திரங்கள்
பரப்பிக்கிடக்கிறது….
இன்னும்ஒழுகும் இடங்களில்
நிரப்பிவைக்கபாத்திரமில்லை…
விளம்பரப்பலகைகளை தூக்கிச்
செல்லும்காற்றுக்கு இற்றுப்போனகூரையொன்றும்
பொருட்டில்லை…
நனைந்தஉடம்பிற்கு…நனையாமல் நிற்கஇடமும் இல்லை…
மாற்றுத்துணியும் இல்லை…
பேயாட்டம் ஆடும் தென்னமரம்..
வீட்டைக்குறிவைத்தால்…
மிஞ்சுவது எதுவெனத்தெரியாது…
அரசாங்கபள்ளிக்கூடங்களில்
ஒதுங்கினால்…மழை கடந்துவிடும்உணவும் கிடைத்துவிடும்…உணர்வுதான்
ஒன்றாது…
நெகிழிக்கழிவுகள் எங்கும் கடைபரப்பி…
முழங்கால்அளவு தேங்கிக்கிடக்கிறது நீரெங்கும்..
குந்திக் கழிவைவெளியேற்ற..
குன்றத்து முருகனே துணை…
மழையை ரசித்தபடி தொண்டையை வெப்பத்திரவம்
நனைக்க…நீங்கள் ஏதேனும்
கொரித்துக்கொண்டிருக்கக்கூடும்
உங்கள் பார்வையில் எவ்வுயிரேனும் நனைந்தால்…
உங்கள் கருணைக்கொடையை
கொஞ்சம் உயர்த்திப்பிடியுங்கள்.
♦

உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு இக்கவிதை!