அதிதி தேவோ பவ /எஸ்ஸார்சி

ஒமைக்ரானா
யாரப்பா உனையழைத்தது
மூத்த கொரானா
நுண்மிக்கோ கொம்புகளுண்டு.
கொம்பேயில்லாததாம்
ஒமைக்ரான்
ஆர்டிபிசிஆர் ஆய்வில்
அகப்பட்டுக்கொள்ளா அரூபி
அடங்காப்பிடாரி
சர்வதேச விமானங்கள்
நொண்டி
அடிக்கத்தொடங்குகி விட்டன.
மீண்டும் தாயம்
போட்டு
போராட்டம் துவங்க
வேண்டும்
டபுள்யு எச் ஹோ.
தன்வந்த்ரி மந்திரங்களைக்
காரம் கூட்டி
எழுதிடக்காலம்
பணித்திருக்கிறது.