
விருட்சம் 129வது இதழ் உரியக் காலத்தில் வந்து விட்டது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 37வது ஆண்டின் துவக்கத்தில் வெளிவருகிறது.
ஒரு காலத்தில் குறிப்பிடப்படுகின்ற எழுத்தாளர்களின் படைப்புகளைச் சுமந்து வந்துகொண்டிருந்த விருட்சம்,
இன்று திசைத் தெரியாமல் இருப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய முத்திரையைப் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.
வழக்கம்போல விருட்சம் தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 200.சந்தாவைப்
புதுப்பிக்க விரும்புபவர்கள் கூகுள் பே எண் 9444113205ல் பணம் அனுப்பவும்.
இந்த இதழின் அட்டை ஓவியம் : எஸ்.வைதீஸ்வரன்
