
உருவம்
தூரத்தில் புள்ளியாய்
உன் உருவம்
என் மனதில் என்றும்
நீ விஸ்வரூபம்
காலம் நமைப் பிரித்தாலும்
கண்கள் என்றோ புகைப்படம் பிடித்ததே !
சித்திரம்
அரூபமாய் நீ வானில்
அழியாத கோலமாய்
என் மனதில்
உன் புகைப்படம் சித்திரமாய் சுவரில்
அலங்கரிப்பு
உன் வாசம் நாசித் துவாரம் வழியே உடல் முழுதும் பரவ
பரவச நிலையில் பட்டாம்பூச்சியாய் நான் வானில் சிறகடித்துப் பறக்க
என் புகைப்படத்தை
சித்திரம் தீட்ட எவருமில்லை
இப்புவியில் !
