அழகியசிங்கர்/பை

இந்தப் பை
ஓட்டையாய் இருக்கிறது

ஓட்டைப் பையை நிரப்ப
தபால்கள்,

எல்லாம் ஞாபகமாய்
போஸ்ட் செய்கிறேன்.

ஓட்டைப் பையைத்
திரும்பவும்
கொண்டு வந்து விடுகிறேன்.

இன்னும் பல தபால்களை
நிரப்புவதற்கு….

காலம் காலமாய்
ஓட்டைப் பையும் தபால்களும்.