
பேச்சோடு பேச்சாக
பேசிக் கொண்டிருக்கையில் என்னை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டாள் என் ப்ரியமான தோழி.
எனக்கு கோபம் வரவில்லை அழுகைவரவில்லை
அதிமுக்கியமாக சிறு வருத்தம் கூட வரவில்லை.
ஒரு பைத்தியமாவதற்கு
என்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் என்னிடம் இருக்கிறது அதில் சந்தோசம் தான் எனக்கு
பாருங்கள் இப்போது கூட. சிட்டுக் குருவியின் கூட்டை அம்மா கலைத்துவிட்டதற்காக
கலைந்த கூட்டைக் கையிலேந்தி அழுது கொண்டிருக்கிறேன்
